தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Monday, November 30, 2015

உலகின் சக்திவாய்ந்த நிறுவனங்கள்

இது சோஷியல் மீடியா யுகம். தனி மனிதர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தினால்தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகமுடியும். ‘பிஸினஸ் இன்சைடர்’ பத்திரிகை சமீபத்தில் உலகின் சக்திவாய்ந்த 50 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. நிறுவனத்தின் வருமானம், பணியாளர்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அந்த நிறுவனத்தின் ஆதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகை அசத்தும் டாப் எட்டு சூப்பர் நிறுவனங்களின் பட்டியல் இதோ...

அமேசான்

ரீடெயில் வர்த்தகத்தில் முன்னணியில் இருந்த வால்மார்ட் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்திற்கு வந்துவிட்டது அமேசான். இது ஒரு வணிக இணையதளம் ஆகும். அருகில் இருக்கும் தபால் நிலையங்களுக்குச் சென்று பார்த்தால் அங்கு வந்திருக்கும் வியாபார பரிவர்த்தனை தொடர்பான கடிதங்களில் பெரும்பாலானவை அமேசான் நிறுவனத்தில் இருந்து வந்ததாகத்தான் இருக்கும். இந்த நிறுவனத்திற்கு பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் 28 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அமேசானின் கடந்த ஆண்டு வருமானம் 88.99 பில்லியன் டாலர்.

மைக்ரோசாஃப்ட்
சமூக வலைத்தளங்களின் பிதாமகன், பேஸ்புக்தான். இந்நிறுவனத்தின் 2014ம் ஆண்டு வருமானம் 86.83 பில்லியன் டாலர். இது 2013ம் ஆண்டைவிட 11 சதவீதம் கூடுதல் வருமானமாகும். இந் நிறுவனத்தின் வியாபாரம்  ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு 7 மில்லியன் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

பேஸ்புக்

சமீபத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் இது. இதன் அதிபர், ஒரு சாமியாரைக் கண்டதாகவும் அதன் பின்பே அவர் வாழ்வில் மிகப்பெரிய
மாற்றம், வளர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.  மொத்த மொபைல் இ.காமர்ஸ் வியாபாரத்தில் 3ல் இரண்டு பங்கை தன்வசம் வைத்துள்ளது பேஸ்புக். இதன் மார்க்கெட் மதிப்பு 250 பில்லியன் டாலர். இதன் கடந்த ஆண்டு வருமானம் 12.7 பில்லியன் டாலர்.



யாகூ

 இது அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம். வீடியோ மற்றும் சமூக சேனல்களுக்கான நிறுவனமாக செயல்படுகிறது. இதற்கு, 575 மில்லியன் மொபைல் பயனாளிகள் உள்ளனர். உலக அளவில் மிக அதிக மொபைல் பயனாளிகலைக் கொண்டது யாகூதான்.  உலகின் மிகப்பிரபலமான 5வது வெப்சைட் இது.  இதன் கடந்த ஆண்டு வருமானம், 4.98 பில்லியன் டாலர்.

கூகுள்
இடம், முகவரி, தகவல்கள், செய்திகள் உள்பட பல்வேறு தேடல்களுக்கு உதவும் இணையதளம் இது. கூகுள் இல்லாமல் மனிதன் எப்படி ஒரு காலத்தில் வாழ்ந்தான் என்று சிந்திக்கும் அளவிற்கு மனிதனுக்கு கூகுள் இன்று உதவியாக உள்ளது. அல்பபெட் இன்க் நிறுவனம் ஒன்றை உப நிறுவனமாக கடந்த ஆண்டு கூகுள் தொடங்கியது. இதன் முதன்மை நிர்வாகியாக தமிழரான சுந்தர் பிச்சை செயல்படுகிறார். இது அமெரிக்காவின் மிகச்சிறந்த நிறுவனம். கடந்த ஆண்டு வருமானம் 66 பில்லியன் டாலர்.

இன்டெல்
செமி கண்டக்டர், சிப் மேக்கர் தயாரிப்பில் மிகச்சிறந்த நிறுவனம். கலிபோர்னியாவை மையமாகக்கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் மார்க்கெட் மதிப்பு 140 பில்லியன் டாலர். சமூக வலைத்தளங்களில் இதன் பங்கு மிக அதிகம். இதற்கு ட்விட்டரில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 25 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இதன் கடந்த ஆண்டு வருமானம் 55.25 பில்லியன் ஆகும்.

இபே

இதுவும் கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம்தான். இ.காமர்ஸ் நிறுவனம். இதற்கு ஸ்டப்ஹப் மற்றும் பேபால் என இரு துணை நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் 203 மார்க்கெட்டில் இபேயின் செல்வாக்கு அதிகம். இணைய வணிகத்தில்  சக்கைபோடு போடும்  இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் 17.9 பில்லியன் டாலர்.

ஹ்யூலட் பேக்கார்ட்

தனது 30 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளதால் இதன் மதிப்பு கொஞ்சம் இறங்கியுள்ளது என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக இடம் பெறுவது இதுதான். ட்விட்டர், பேஸ்புக்கில் இதற்கு 4  மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதன் கடந்த ஆண்டு வருமானம் 111.5 பில்லியன் டாலர்.

- ராஜிராதா, பெங்களூரூ.


ரிலாக்ஸ் ப்ளீஸ்...



காலத்தில் உள்ள நாம் அதை போலவே வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இதனால் தேவையற்ற மன பயம், மன உளைச்சல், கவலை, நோய் என தேவையற்றவைகளையும் காசு கொடுக்காமல் விலைக்கு வாங்குகிறோம். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதை மறக்க வேண்டாம். வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல் இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது. யாரிடம் பேசினால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.

அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும் குழந்தைகளிடம் பேசி மகிழுங்கள். இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையை பெயர்த்தெடுக்க முடியும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறு, சிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள் எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.

வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதை செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையை காதலியுங்கள். ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோவிலுக்குச் செல்வதை விட, கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தர் கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் உற்சாகம் தரும்.

அதுவும் செய்ய முடியாதவர்கள் தினமும் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளுக்கு நடந்து செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உங்கள் விருப்பங்களையும், தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது, மன உளைச்சலில் கொண்டு போய் விடும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், பிரதிபலன் எதிர்பாராமல் தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும்.
#தினகரன்

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!
நீதி:
வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

Sunday, November 22, 2015

பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை…!



அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்…
ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா..? மிக்க நன்றி” என்றார்.
நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும்…
பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை…!
After Pasting both code Save Your Template Settings.