தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Tuesday, December 8, 2015

அறிந்துகொள்வோம் 2

* ஆஸ்திரேலியாவில் இதய வடிவிலான பவழப்பாறை உள்ளது.

*
லாப்ஸ்டர் என்ற கடல்வாழ் உயிரியின் பல் அதன் வயிற்றில் உள்ளது.

*
உடல் வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும் வரை ஒட்டகத்துக்கு வியர்க்காது.

*
டால்பினால் தன்னைத் தானே கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

*
அமெரிக்க 100 டாலர் நோட்டில் உள்ள கடிகாரம் காட்டும் நேரம் 4:10.

*
உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி பேட்டரி உருவாக்க முடியும்.

*
பச்சோந்திகளால் 20 வினாடிகளுக்குள் நிறம் மாறிக்கொள்ள முடியும்.
*
பனிக்கட்டியில் ஏறக் குறைய 90 சதவீதம் காற்றுதான்!

* அந்துப்பூச்சிகளால் ஒன்றையொன்று பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் மோப்பம் பிடித்து அறிய முடியும்!

* அலிகேட்டர் முதலைகளால் 80 ஆண்டுகள் வாழ முடியும்.

*
சில நத்தைகள் 3 ஆண்டுகள் தாண்டியும் உறங்கிக்கொண்டே இருக்கும்.

* அடி முதல் நுனி வரை நம் நகங்கள் வளர 6 மாத காலம் ஆகிறது.

*
தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்!

*
கார் டயரை விடவும் பெரிதான மலர், இந்தோனேஷிய மழைக்காடுகளில் மலர்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மலர்.

* நம் உடலின் 10 ஆயிரம் செல்களை ஒரே ஒரு குண்டூசி முனையில் நிரப்பி விடலாம்!

*
மூளை அனுப்பும் செய்திகள் நரம்புகள் வழியாகப் பயணிக்கும் வேகம் மணிக்கு 312 கிலோமீட்டர்.

*
இந்த நொடியில் உங்கள் வாயில் 10 லட்சத்துக்கும் அதிக பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன!

*
கரப்பான்பூச்சிகளால் நீருக்கடி யிலும் 15 நிமிடங்கள் தாக்குப் பிடித்து உயிர்வாழ முடியும்.
* 5
ஆயிரம் ஆண்டுகள் வயதான பிரமிடுகள் மட்டுமல்ல... அதே வயதான மரமும் பூமியில் உள்ளது.

* இரையைத் துரத்தும் சிறுத்தை, தரையில் கால் படாது காற்றில் இருக்கும் நிலையிலேயே, தன் திசையை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தது.

*
சில ராணித்தேனீக்கள் வயதானவர்களைப் போல பிதற்றிக்கொண்டே இருக்கும்!

*
ஒரே இரவில் வௌவால் 3 ஆயிரம் பூச்சிகளைக்கூட தின்னும்.

* ஒட்டகங்களைப் போல ஒட்டகச்சிவிங்கிகளும் சில நாட்களுக்கு நீரில்லாமலே வாழ முடியும். இவற்றின் திசுக்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

* 13
வயதில், நம் கண்கள் வளர்வது நின்று விடுகிறது. ஆனால், மூக்கும் காதுகளும் வளர்ச்சியை நிறுத்துவதில்லை.

*
ஆண் குதிரைக்கு 40 நிலையான பற்கள் இருக்கும். பெண் குதிரைக்கு 36லிருந்து 40 வரை.

*
உலகிலேயே அதிக முறை பாடப்பட்ட பாடல்: ‘ஹேப்பி பர்த்டே டூ யூ!’

*
உலக மக்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் தொலைபேசியைப் பயன்படுத்தியதே இல்லை!

*
நெதர்லாந்தில் நீர் நிலைக்குக் கீழே சுரங்கக் கீழ்பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெறுகிறது.

* தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும்.

*
மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும்.

*
நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.

*
ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.

* எருமை அளவு எடை கொண்ட ஆமைகள் கூட கடலில் உண்டு!

* ஒரு குதிரையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவு மின்சாரத்தை எலெக்ட்ரிக் ஈல்கள் உருவாக்குகின்றன.

*
ஓட்டகத்தைக் காட்டிலும் சில எலிகளால் அதிக நாட்கள் நீரின்றி வாழ முடியும்.
*
கிளியின் அறிவு 5 வயது குழந்தைக்கு ஒப்பானது!

*
காகங்கள் தங்களை தொந்தரவு செய்யும் மனித முகங்களை நினைவு வைத்துக் கொள்ளும்!
* மேன்டிஸ் பூச்சியினால் அதன் தலையை அனைத்துப் பக்கங்களிலும் திருப்ப முடியும்

* எலிகள் ஓராண்டில் 105 குட்டிகள் வரை இனப்    பெருக்கம் செய்யும்.

*
காட்டுத்தீ பள்ளமான பகுதிகளை விடவும் விரைவாக மேல்நோக்கிப் பரவும்.

*
உடலை குளிர்விப்பதற்காக முன்னங்காலை நக்கும் பழக்கம் கங்காருகளுக்கு உண்டு.

* நெருப்புக்கோழியின் கண்கள் அதன் மூளையை விடப் பெரியது!
*
கோலா விலங்குகள் ஒரு நாளில் 4 மணி நேரம் மட்டுமே விழித்திருக்கின்றன.

* சில பனிச்சறுக்கு வீரர்கள் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பதுண்டு.

* 2004ம் ஆண்டு வரை, சிங்கப்பூரில் ‘சூயிங் கம்’ தடை செய்யப்பட்டிருந்தது.

*
பனிச்சிறுத்தைகளால் கர்ஜனை செய்யவோ, பேரொலி எழுப்பவோ முடியாது.
*
பெண் தேனீக்கள் மட்டுமே கொட்டும்.

*
சில வகை வண்ணத்துப்பூச்சிகளின் கண்கள் அதன் இறக்கைகளில் உள்ளன.

*
நாம் பேசும்போது 72 வெவ்வேறு தசைகளைப் பயன்படுத்துகிறோம்.

*
நமது உடலில் 96560 கிலோமீட்டர் நீளமுள்ள ரத்த நாளங்கள் உள்ளன.

*
நாம் ஒவ்வொரு ஆண்டும் 4 கிலோ சரும செல்களை இழக்கிறோம்.

*
ஆரஞ்சு பழங்களை விட   ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது.

*
முதலையால் அதன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

*
நாம் கனவு காணும்போது, உட[]லை நகர்த்த முடியா து                          .

*
கிரிக்கெட் என்கிற வெட்டுக்கிளி வகை பூச்சி ஒரு நொடிக்கு எத்தனை முறை ஒலி எழுப்புகிறது என்பதைப் பொறுத்து, வெப்ப நிலையைக் கணக்கிட முடியும்.

* குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

*
கைரேகையைப் போலவே நாக்கின் ரேகைகளும் தனித்துவம் மிக்கவை.

* விண்கலத்தில் உருளைக்கிழங்குச் செடி வளர்த்து சோதனை செய்திருக்கின்றனர் விண்வெளி விஞ்ஞானிகள்.

*
கிரிஸ்லி வகை கரடியால் குதிரைக்கு இணையான வேகத்தில் ஓட முடியும்.

* பால்வீதி மண்டலத்தைக் கடக்க வேண்டுமென்றால், ஜம்போ ஜெட் விமானத்துக்கே 120 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்..


*
வியாழன் கோளில் 300 ஆண்டு களாகத் தொடரும் சூறாவளி, இன்னும் வலுவாக உள்ளது.

* பெரு நாட்டில் புத்தாண்டன்று மஞ்சள் வண்ண உள்ளாடை அணிந்தால் அதிர்ஷ்டம் என்பது நம்பிக்கை!

* கட்டுப்பாடற்ற வான்கோழிகள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் கூட ஓடும்!

* உலகின் மிகச் சிறிய குரங்கின் உயரம் - ஒரு டூத் ப்ரஷ் அளவுதான்!

* விண்வெளி வீரர்களின் பாதத் தடங்கள் என்றும் நிலவில் நிலைத்திருக்கும். அவற்றை அழிக்க அங்கே காற்றில்லையே!

*
அமெரிக்காவில் நிஜ ஃப்ளமிங்கோ பறவைகளை விட, பிளாஸ்டிக் பறவைகளே அதிகம்.

* பார்வைக்கு, மூளையின் மொத்த சக்தியில் மூன்றில் ஒரு பங்கு தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.