தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Tuesday, December 8, 2015

பொதுஅறிவு குறிப்புக்கள் தெரிந்துகொள்வோம்


* பருவநிலை மாற்றங்கள் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளின் பறக்கும் வேகமும் கூடியுள்ளது.

*
பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் கணக்கிட்டால் தலா 20 கோடி பூச்சிகள் உள்ளன!

*
தெள்ளுப்பூச்சியால் (Flea) உணவில்லாமல் 100 நாட்கள் வரை வாழ முடியும்!

*
பச்சோந்தியால் தன் மனநிலைக்கு ஏற்பவும் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

*
புலியால் ஒரேமுறை 27 கிலோ தீனியை உள்ளே தள்ள முடியும்.

*
பழுப்பு வௌவாலால் ஒரு மணி நேரத்தில் கொசு அளவிலுள்ள 1,200 பூச்சிகளைத் தின்ன முடியும்!

* கொரில்லாக்களும் எலிகளும் அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக, தம் கழிவையே தின்னுவதுண்டு.

*
நீலத்திமிங்கலம் போகிற போக்கிலேயே பிரமாண்ட மீன் கூட்டங்களை உறிஞ்சி விழுங்கி விடும். ஒரு நாளைக்கு சுமார் 4 டன்!

* நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை 600 கிலோ. அதன் முக்கிய ரத்த நாளத்தின் வழியே ஒரு மனிதர் புகுந்து வர முடியும்!

*
பூச்சிகளால் தங்கள் உயரத்தைக் காட்டிலும் 80 மடங்கு வரை தாவ முடியும். இது ஆறடி மனிதன் 480 அடி உயரம் தாண்டுவதற்கு நிகரானது!

*
சராசரி ஆப்ரிக்க யானையின் எடை 10 ஆயிரம் கிலோ. இந்திய யானையின் எடை சுமார் 5,400 கிலோதான்!

*
பாம்புகளின் விஷச்சுரப்பிகளைக்கூட விட்டு வைக்காமல் விழுங்கி விடும் திறமை கீரிகளுக்கு உண்டு!

ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இடப்பெயர்ச்சி செய்வது கில்லர் திமிங்கலங்களின் வழக்கம்.

*
பனிக்கரடிகளின் ரோமம் நிறமற்றது. சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் அவை வெண்மையாகத் தோன்றுகின்றன.

*
கோழியின் கல்லீரலைப் பயன்படுத்தி குரூப் ரத்தத்தை குரூப் ரத்தமாக மாற்ற முடியும்.

*
நாய்களில் டால்மேஷனுக்கு மட்டும் மூட்டு நோய்கள் ஏற்படக்கூடும்

* முட்டைக்குள் உருவாகும் கோழிக்குஞ்சுகளால், மேல் ஓட்டின் வழியாக சுவாசிக்க முடியும்

*
ஸ்லோத் என்ற குரங்கு போன்ற ஒருவகை உயிரினம் ஒரு மைல் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும்

* உடலியல் ரீதியாக, சிங்கத்தை விட நீர் யானை அபாயமானது.

*
சில பெண் மீன்களால் ஆணாக மாற முடியும்!

*
சிலந்தியின் சின்னஞ்சிறு உடலின் 80 சதவீதம் பகுதி மூளைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

* ஆமைகள் பின்பக்க துளை வழியாக சுவாசிக்கின்றன.

*
தெள்ளுப்பூச்சி தன்னைவிட 130 மடங்கு உயரம் வரை தாண்டும் திறன் கொண்டது!

* நிறைய மின்மினிப்பூச்சிகளை விழுங்கிவிட்டால், அந்தத் தவளையும் சிறிதுநேரம் மினுமினுக்கும்!

* பூனைகளுக்கு சுவை உணரும் சக்தி குறைவு. அவற்றுக்கு 473 சுவை மொட்டுகள்தான். மனிதர்களுக்கோ சராசரியாக 8 ஆயிரம்!

*
காகங்களால் தங்களை மோசமாக நடத்திய மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்!

* 2012ல் மட்டுமே 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான புதிய உயிரிகள் அறியப்பட்டிருக்கின்றன. 795 இனங்களை இழந்திருக்கிறோம்.

* 25
ஆயிரம் பூச்சிகள், உண்ணிகள், சிலந்திகளுக்கு ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரமே இடம் கொடுக்க முடியும்!

*
காலபோகஸ் தீவில் இருக்கும் ஒரு ஆமை இனம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும்.

* இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை இருந்துள்ளன

* பூனைகளைவிட மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு அதிகம்.

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.