தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Tuesday, December 8, 2015

அறிந்துகொள்வோம்




* எரிமலை சாம்பல் மண்ணுக்கு மிக உகந்தது. எரிமலை வெடிப்புக்குப் பின் அப்பகுதியில் செடிகள் செழிக்கும். விலங்குகளுக்கும் வாழும் சூழல் உருவாகும்.

*
பெரும்பாலான பனிச்சரிவுகள், மனிதர்கள் பனிப்பாளங்களைத் தேவையில்லாமல் கையாள்வதாலேயே ஏற்படுகின்றன.

*
வேகத்தையும் சீற்றத்தையும் சற்றும் குறைக்காமலே ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் பயணிக்க சுனாமியால் மட்டுமே முடியும்.

*
உலக அளவில் வார நாட்களில் அதிக வேலைகள் நடைபெறுவது செவ்வாய்க்கிழமையில்தான்!.

*
பல் சீரமைப்புக்கு க்ளிப் போடுவதைப் போல, ஜப்பானில் மூக்கை ஷேப் ஆக்க க்ளிப் விற்கிறார்கள்!

*
உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் செய்யும் அளவுக்கு ஏற்ப, மிக விரைவாக மூளையின் செல்கள் மறுஉயிர்ப்பு பெறுகின்றன.

*
இயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட உடைகள் காலப்போக்கில் மக்கி விடும். லினன் உடைகள் மக்குவதற்கோ 35 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

*
உலகிலேயே பெரிய விதை தேங்காய்தான்

* உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 6.1 சென்டிமீட்டர் வளர்கிறது. அதன் இப்போதைய உயரம் 8,848 மீட்டர்!

*
அதிக அளவு சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்கள் மிக விரைவில் மூப்பு தோற்றத்தை அடைகிறார்கள்.

*
ரத்தத்தின் கொந்தளிப்பு பற்றி ஆராய்வதற்காக, லியனார்டோ டா வின்சி கண்ணாடி இதயங்களை உருவாக்கினார்.

* 130
டெசிபலுக்கு அதிக ஒலியைக் கேட்கும்போது மனிதர்களுக்கு காதுவலி ஏற்படும்.

*
ஒரு அமெரிக்கர் சராசரியாக ஆண்டுக்கு 120 ஆப்பிள் சாப்பிடுகிறார்

* ஃப்ளமிங்கோ பறவைகளின் வித்தியாசமான வண்ணம் அவற்றின் உணவிலிருந்தே கிடைக்கிறது.

*
நமது இதயம் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை துடிக்கிறது.

*
தூங்கும்போது நமக்கு தும்மல் ஏற்படுவதில்லை.

*
குளிக்கும் விஷயத்திலோ இது தலைகீழ். 70 சதவீத ஆண்கள் தினமும் குளிக்கிறார்கள். பெண்களில் இது 57 சதவீதம்தான்!

* 200 கோடி மக்களில் ஒருவர்தான் 116 வயதைத் தாண்டியும் வாழ்கிறார்!

* ஒவ்வொரு ஆண்டும் நம் உடலில் 98 சதவீதம் அணுக்கள் மாற்றமாகின்றன.

*
மனச்சோர்வினால் அவதிப்படு கிறவர்களுக்கு மற்றவர்களைவிட 3-4 மடங்கு அதிக கனவுகள் ஏற்படுகின்றன.

*
உலகில் 7500 தக்காளி ரகங்கள் உள்ளன.

* 100
ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது அமெரிக்காவில் அதிக மரங்கள் இருக்கின்றன.

*
திருமணம் ஆகாதவர்களில் 58 சதவீதம் பேர் வாலண்டைன்ஸ் டேவை விரும்புவதில்லை!.

*
பேஸ்கட் பால் ஆட்டம் தோன்றியபோது, பந்தின் நிறம் பிரவுன் ஆக இருந்தது. பிற்காலத்தில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது.

* கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது.

*
எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது.

*
கடலின் சராசரி ஆழம் 4.3 கிலோமீட்டர்.

*
ஈபிள் கோபுரம் கோடைக்காலத்தில் வெப்பத்தால் 15 செ.மீ. உயரம் நீள்கிறது. .

*
பூமியின் 11 சதவீத நிலப்பகுதி யில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்த அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது.

*
முழுதும் எடையேற்றப்பட்ட பெரிய கப்பலை நிறுத்தும் ஆணை பிறப்பித்த பிறகும், அது நிற்க 20 நிமிடங்களாவது ஆகும்.

*
க்யூப் விளையாட்டை 20 திருப்பங்களுக்கு உள்ளாகவே முடிக்க முடியும்.

*
உலகில் விற்பனையாகும் ஐஸ்க்ரீம்களில் மூன்றில் ஒரு பங்கு வெனிலாவே!

*
நம் மூச்சுக்காற்றே பனித்துகளாக மாறிவிடும் அளவு சைபீரியாவில் குளிர் நிலவுகிறது.

* 1850
ம் ஆண்டு வரை இடது, வலது ஷூக்கள் கிடையாது. இரண்டுமே ஒரே மாதிரியானவை!

*
காதல் வயப்படும் ஜென்ட்டோ பெங்குவின், தன் காதலிக்குப் பரிசளிப்பதற்கான சிறிய கல்லை கடற்கரை முழுவதும் தேடித் தேர்ந்தெடுக்கும்!

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.