தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Tuesday, December 8, 2015

சோமாலிய கடற் கொள்ளையர்களும் ஊடகங்களின் போய்பிரச்சரமும்

சோமாலியா என்றவுடன் பல மக்கள் கூறுவது கடல் கொள்ளையர்கள் அவர்களை போன்று  கொள்ளையர்கள் இந்த உலகத்தில் இல்லை இன்னும் பலர் இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக இவர்களின் வாழ்வாதாரம் பஞ்சத்தில் தவிப்பதால் இந்த கொள்ளைகள் அரங்கேறுகிறது இந்த பதிலும் ஒரு விதத்தில் மறைமுக குற்றச்சாட்டாகவே அமைகிறது சாதாரண மக்களுக்கு என்னதான் நடக்கிறது சோமாலியாவில் சோமாலியாவில் துப்பாக்கியை ஏந்தி ஒரு கூட்டம் அலைகிறது ஏன் அவர்கள் அப்படி செய்யவேண்டும் என்ற பல கேள்வி நமக்கு எழும்பலாம்

சோமாலிய கொள்ளையர்கள் என்ற பெயர் ஏன் வந்தது ??
சோமாலியாவில் 1991 ஆம் ஆண்டு சோமாலியாவின் அரசாங்கம் சிதைந்தது இந்த சீர்குலைவின் மூலம் 9 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பக்கம் தள்ளப்பட்டார்கள் இன்று வரை அந்த நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் அமெரிக்காவும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் ஏன் அவர்கள் சோமாலிய அரசு சீற்குளைந்ததை தங்களுக்கு சாதகமாக எடுத்துகொண்டு அந்த நாட்டிற்குள் உணவு பொருட்கள் கொண்டு வருவதை கொள்ளை அடிப்பதும் தங்கள் நாட்டில் அணுமின் கழிவுகளை சோமாலிய கடலின் ஒரு பகுதியில் கலப்பதும் என்று தங்கள் ராச்சியத்தை சோமாலிய கடலில் செய்துவந்தார்கள் இந்த செயல் பாடுகளின் மூலம் அந்த கடற்கறையில் உள்ள மீன்கள் எல்லாம் விஷமாகவும் செத்து மடிந்தும் காணப்பட்டது , இதுவரை அந்த பகுதியில் எந்த ஒரு கடல் உணவும் எடுக்க இயலாத அளவிற்கு அணுமின் கழிவுகள் நிரம்பி வழிகிறது

1982
ஆம் ஆண்டின் உலக நாடுகள் சபையின் சமர்பிக்கப்பட்டகடல் சார்ந்த சட்டத்தின் படி சுமார் 12 மைல் தூரம் வரை சொந்த மண்ணின் மைந்தர்களின் உணவுக்காக கடல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம் நீங்கள் சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பல்கள் என்று கருதப்படும் அனைத்து கப்பல்களின் நிலையிலும் நீங்கள் காணலாம் அவை 12 மைல் தூரத்திர்க்குல்லேதான் இருக்கும் . அவர்கள் ஏன் கப்பலை பிடிக்கிறார்கள்என்ற விளக்கம் இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும் ..

மேலும் சில ஆண்டுகளில் சிதைந்த சோமாலிய அரசு காணாமல் போய் விட்டது அதை தொடர்ந்து அதுவரை சிறுக சிறுக கழிவுகளை கொட்டி வந்த ஐரோப்பாவின் நாடுகள்  பெரிய பெரிய கப்பல்களில் களிவுகளை பாரல் பாரளாக வந்து கொட்டினார்கள் அதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனை கழிவுகள் தொழிற்சாலை கழிவுகளை அனைத்தையும் ஒன்று சேர்த்து சோமாலியாவின் கடலில் கொட்டினார்கள். இந்த உண்மை அறியாத அந்த பாமர மக்கள் இந்த கழிவுகளின் விசத்தன்மையை உண்ட சில மீன்களை பிடித்து விற்பனை செய்து தாங்களும் உண்ட நிலையில் அந்த விசத்தன்மையில் தாக்கம் குழந்தைகள் பெண்கள் என்று பல உயிரை காவு வாங்கியது ஏன் இவ்வாறு கடல் விசத்தன்மையாக மாறியது என்று நிலை அறியாத அந்த மக்களுக்கு 2005 சுனாமியின் பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன கழிவு மின் கழிவு பர்றேல் பாரேலாக கரை ஒதுங்கியது அந்த மின் கழிவின் ஒழி கதிர் மூலமாகவும் 300 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி கடற்கரை மக்கள் மடிந்தார்கள்

இந்த சூழ்ச்சி ஒரு புறம் அரங்கேற மறு புறம் தூய்மையாக இருக்கும் கடக்கரை
பகுதிகளில் ஐரோப்பாவின் கடற்படையினர் மற்றும் மீன் வியாபாரக்கூட்டம் அந்த பகுதி மீன்களை கொள்ளையடித்தது சோமாலிய கடல் பகுதியில் கணக்கெடுப்பின் படி 300 மில்லியன் டாலர்களின் வேகுமதியுள்ள மீன்களான tuna, shrimp, lobster மற்றும் பல உயரிய வகை மீன்கள் வாழ்கிறது , சோமாலிய மீன் பிடி தொழிலாளிகள் அந்த மீன்களை பிடித்து தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் ஐரோப்பிய கடற் கொள்ளை கூட்டம் மட்டும் கடற் படை என்று கூறும் கொள்ளை கூட்டம் அந்த தொழிலாளிகளின் மீன்களை பறித்து அவர்களின் படகுகளை நொறுக்கி அவர்களை தங்களது நாட்டிற்குள் கூட தங்களுக்கு சொந்தமான மீன்களை பிடிக்கவிடாமல் ஆயுதங்கள் மூலம் தங்கள் வாழ்வாதாரம் நிலையை குலைத்துவிட்டார்கள்

இனி வாழ
வழியில்லை என்ற நிலையில் சோமாலியாவின் படை உருவாகியது ஆதாவது உலக ஊடகம் மற்றும் மேற்கத்திய ஊடகம் கூறும் சோமாலிய கடற் கொள்ளையர்கள் யார் அவர்கள் மீன் பிடி தொழிலாளிகள் ,, தங்கள் வாழ்வை பறித்த கூட்டத்தை எதிர்த்து போராடுகையில் அவர்களுக்கு கிடைத்த பட்டம்தான் சோமாலிய கொள்ளையர்கள் இதைத்தான் உலக ஊடகம் நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறது இந்த போராட்ட படையின் முதல் குரலாக அதி வேக படகை உருவாக்கி ஒரு குழு கடலுக்குள் சென்று தங்கள் நாட்டிற்குள் அத்து மீறி மீன்களை பிடித்திக்கொண்டிருக்கும் கூட்டத்தை கைதிகளாக பிடித்தார்கள்  இவர்களின் இந்த நிலையை அறிந்த சோமாலிய தேசிய பாதுகாப்பு படை இவர்களுடன்  கை கோர்த்தது , கைதிகளை விடுவிக்க பனைய தொகை விதித்தது இந்த குழு .. இன்றைய கணக்கெடுப்பின் படி சோமாலியாவின் வருமானத்தின் அதிகமான வருமானம் தங்கள் நாட்டில் இருந்து கொள்ளையடிக்கும்கூட்டத்திடம் இருந்து பறிமுதல் செய்வது இதைதான் இந்த உலக ஊடகம் கொள்ளை என்று கூவிக்கொண்டிருக்கிறது

இந்த ஐரோப்பா மற்றும் அமெரிக்க அந்நிய கூட்டத்தால் சோமாலியர்களுக்கு
ஏற்பட்ட இழப்பு குறைந்தபட்சம் $339 மில்லியனில் இருந்து $413 மில்லியனாக இருக்கலாம் இந்த இழப்பு கணக்கெடுப்பு 2005 இல் இருந்து 2012 வரை மட்டுமே இந்த இழப்பை பங்கிட்டு கொடுப்பீர்களானால் அந்த சோமாலிய கடற் படை வீரர்கள் அதாவது உலகத்தின் பார்வையில் கொள்ளையர்கள் தலைக்கு 30000 டாலர்களில் இருந்து 75000 டாலர்வரை கொடுக்கலாம் மேலும் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக 10000 டாலர்களும் சேர்த்து கொடுக்கலாம் இப்பொழுது கூறுங்கள் யார் கொள்ளையர்கள் உலக ஊடகம் இவர்களை தீவிரவாதிகளாகவும் கொள்ளையர்களாகவும் சித்தரிப்பதற்குமேலும் ஒரு காரணம் இவர்களின் அதிகமானோர் முஸ்லீம்கள்
இப்படி இவர்களை ஒரு ஊடக கண் கொண்டு பார்ப்போமேயானால் அது அறிவின்மை .
Source:- Warriors VOICE

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.