தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Tuesday, December 8, 2015

ஆபிரகாம் லிங்கனின் வரலாற்று பக்கத்தில் இருந்து..

வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களைப் படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையைக் கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.

வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை. ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது; ஒரு நாள் ஹாயாக அவர் சுடு சூப்பை முகத்தில் ஊற்ற, துடைத்த விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார்.

ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து, அதில் ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை, நன்றி சொல்லி அப்படியே செய்தார்.

ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர், ‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’ என நக்கலாக சொல்ல, ‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்’’ என்றார் அமைதியாக.

வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்திக் கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன. போர்களங்களில் தன் பிள்ளைகளை இழந்தார்; நாடே தத்தளித்தது. அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாக போரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது.

கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார்; தேர்தல் வந்தது மீண்டும் வென்றார்.

ஆப்ரகாம் லிங்கனை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் நாடகம் பார்த்தபொழுது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்தத் தலைவன்.

‘‘
நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே வேண்டும்; நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதைவிட என் அக வெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால். அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்’’ என்றவர் ஆபிரகாம் லிங்கன்

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.