தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Tuesday, December 8, 2015

யாரையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்


விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார். வழியில், காரின் டயர் பஞ்சர் ஆகி விட்டது.. அந்த பகுதியில் பஞ்சர் ஒட்டும் கடை ஏதும் இல்லை. எனவே, அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்களையும் கழட்டி விட்டு, “ஸ்டெப்னி “சக்கரத்தை எடுத்து மாட்டிய போது, கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள், அருகிலுள்ள ஒரு சாக்கடை குட்டையில், சிதறி விழுந்து விட்டது..


இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார், விஞ்ஞானி. அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து “ஐயா என்ன ஆச்சு?” என்று கேட்டான். விஞ்ஞானியோ, “இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது ?” என்று சிந்தித்த போதும், “இந்த சாக்கடை குட்டையில் இறங்கி, சாக்கடையில் விழுந்துள்ள போல்ட்களை எடுத்துத்தா., உனக்கு பணம் தருகிறேன்” என்று கூறினார்.
உடனே, அந்த வழிப்போக்கன், “ஒ.. இது தான் உங்கள் பிரச்சினையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி “போல்ட்”களை எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை.. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது” என்று கூறினான்.
உடனே விஞ்ஞானி,” என்ன சுலப வழி?” என்று கேட்டார். உடனே, அந்த சாதாரண மனிதன், மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழட்டி, இந்த சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு, மெதுவாக காரை ஓட்டிச்செல்லுங்கள்., அங்கு 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள்” என்றாரே பார்க்கலாம்.

“நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே” என்று வேதனைப்பட்டார், அந்த விஞ்ஞானி!!!
யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்பதே, இதிலுள்ள நீதி!!!

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.